டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியபுனித தலங்களுக்கு பக்தர்கள் மேற்கொள்ளும் பயணம் சார் தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில்களுக்கு கோடை காலத்தில்6 மாதங்களுக்கு மட்டுமேபக்தர்கள் அனுமதிக்கப்படுகின் றனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சார் தாம் யாத்திரைகடந்த மே மாதம் தொடங்கியது. சிவனுக்குரிய 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான கேதார்நாத்தில் கடந்த மே 10-ம் தேதி அட்சய திருதியை நாளில் நடை திறக்கப்பட்டது.
இந்நிலையில் இக்கோயிலில் கடந்த 6-ம் தேதி வரை 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து ருத்ரபிரயாகை மாவட்ட ஆட்சியர் நேற்று கூறுகையில், “வெறும் 28 நாட்களில் இக்கோயிலில் 7,10,698 பேர் வழிபாடு செய்துள்ளனர்” என்றார்.
இக்கோயிலில் இதற்கு முன் கடந்த ஜூன் 2-ம் தேதி 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோயிலுக்கு வந்த மொத்த பக்தர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளதாக உத்தராகண்ட் அரசு 2-ம் தேதி தெரிவித்தது.