வேலூர்:
இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால், வேலூரில் உள்ள வைணவ தலங்களில் சுமாமி - அம்பாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
அதன்படி, அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வெங்கடேசபெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
இதேபோல், காகிதப்பட்டரை பகுதியில் உள்ள ஸ்ரீ ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோயிலிலும் மெயின் பஜார் சாலையில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேச பெருமாள் கோயிலிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாரக் கடைசியில் 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு கோயில்களில் அனுமதி இல்லை என்பதால், இன்றும் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய கோயில்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
படங்கள்: வி.எம்.மணிநாதன்