வேளாங்கண்ணியில் கொடியேற்றம்


பேராலய பின்னணியில் கொடி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டு திருவிழா 29-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடி ஊர்வலம்

வழக்கமாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் மத்தியில் மிகப்பிரம் மாண்டமாக நடைபெறும் கொடியேற்ற நிகழ்வு கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி மிக எளிய முறையில் நடைபெற்றது.

எப்போதும் கொடியேற்றத்தின் போது, கொடி ஊர்வலம் பேராலயத்தின் முகப்பில் இருந்து தொடங்கி, கடற்கரை சாலை, ஆரியநாட்டுத் தெரு, திராவிடர் ஓட்டல் வழியயாகச் சென்று பேராலய முகப்பில் புனிதம் செய்து வைக்கப்படும். அதன் பின்னரே கொடியேற்றுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு, கொடி ஊர்வலம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பேராலய வளாகத்துக்குள் மட்டும் கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியைப் புனிதம் செய்து வைத்து, ஏற்றி வைத்தார்.

திருவிழா தொடங்கியதை அடுத்து கோயி ல் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொடியேற்றத்துக்கு பின்னர் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

கொடி

பேராலய ஆண்டுவிழா செப்-8ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. தினமும் காலையில் தமிழ், மராத்தி, கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறும். மாலை கன்னடத்தில் திருப்பலி நடைபெறும். இந்த நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் ஜெபமாலை, அன்னையின் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம் நடைபெறும். செப்- 7 ஆம் தேதி மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, மறையுரை, நற்கருணை ஆசீர், அதனைத்தொடர்ந்து பெரிய தேர்பவனி ஆகியவை கோவில் வளாகத்திற்குள் நடைபெறும். எட்டாம் தேதியன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவுபெறும்.

x