வைகுண்டப் பதவி


நரசிம்மர்

நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்ய வதம் முடிந்ததும், அவ்வளவு தான் என்று நினைத்திருப்போம். ஆனால், அதன் பின் ஒரு சம்பவம் உண்டு.

நரசிம்மர், ஹிரண்ய வதத்துக்குப் பின், சினம் தணிந்து பிரஹலாதனை தன் மடியில் அமர்த்திக் கொள்கிறார். சின்ன குழந்தையின் பக்தியின் உறுதியை சோதிப்பதற்காக, நிறைய கொடுமைகளை பிரஹலாதனுக்கு தந்துவிட்டதாக நரசிம்மர் வருத்தம் தெரிவிக்கிறார். இவ்வளவு பெரிய வார்த்தைகளை கூறலாகாது என்கிறான் பிரஹலாதன்.

பிரஹலாதன் வேண்டும் வரம் அளிப்பதாக, மன மகிழ்ச்சியுடன் உறுதி அளிக்கிறார் நரசிம்மர்.

சிறு குழந்தையாக இருந்தாலும், மிகவும் பக்குவமடைந்து விட்டதால், தனக்கு ஆசைகளே ஒருபோதும் தோன்றக் கூடாது என்று வரம் கேட்கிறான் பிரஹலாதன்.

மேலும், தன் தந்தை தவறு செய்திருந்தாலும் அவரை மன்னித்து, அவருக்கு வைகுண்ட பதவி அளிக்க வேண்டும் என்று கேட்கிறான்.

தவறே செய்தாலும், நற்குழந்தைகளின் பெற்றோர் நிச்சயம் வைகுண்டப் பதவி அடைவார்கள் என்று உறுதி அளிக்கிறார் நரசிம்மர்.

பக்தனுக்காக எதையும் செய்வார் இறைவன்.

x