சொல்வதைக் கேட்கும் சொற்கேட்ட விநாயகர்


சொற்கேட்ட விநாயகர்

ஐம்பதறுபது வருடங்களுக்கு முன்பு, இங்கிருக்கும் விநாயகர் குருந்த மரத்து நிழலில்தான் இருந்தார். இவர் மீது கொளுத்தும் வெயிலும் அடிக்கும்; கொட்டும் மழையும் பெய்து நனைக்கும். அப்போது, இந்தப் பக்கத்தில் வசித்த கூலித் தொழிலாளர் வீட்டுக் குழந்தைகள் மரத்து நிழலில் விளையாடுவதற்காக இங்கே வந்து போவார்கள். அப்படி விளையாடும் பிள்ளைகள் சில நேரங்களில் தங்களுக்குப் பசி எடுத்துவிட்டால், விநாயகரின் தொந்தி வயிற்றில் குச்சியால் அடித்து, ‘எங்களுக்குப் பசிக்குதய்யா..’ என்பார்களாம். சற்று நேரத்தில், விநாயகருக்கு பொங்கல் வைத்து, மோதகம் உருட்டி, வடைமாலை சாத்தி படைப்பதற்காக யாராவது ஒருவர் அங்கு வந்துவிடுவார்களாம்.

விநாயகர் சதுர்த்தியன்று, சொற்கேட்ட விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அன்று ஒருநாள் மட்டும் முத்து அங்கியில் ஐயாவை தரிசிக்கலாம். சதுர்த்தி அன்றும் அன்னதானம் உண்டு. எந்தவொரு காரியத்தில் இறங்கும் முன்பும் கோயிலில் போய் திருவுளம் கேட்பதைச் சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.
சொற்கேட்டானிடம் வேண்டுதல் வைத்து, வெளிநாட்டு வேலைகளுக்குப் போனவர்கள் இந்தப் பகுதியில் ஏராளம் இருக்கிறார்கள். இப்படிப் போகிறவர்களில் பெரும் பகுதியினர், தங்களது முதல் மாத ஊதியத்தில் ஒரு பகுதியை சொற்கேட்டானுக்கே செலவு செய்கிறார்கள்.

முனீஸ்வரரும் ஐக்கியம்

இங்கே, விநாயகருடன் சேர்ந்து முனீஸ்வரரும் ஐக்கியமாகி இருப்பது எங்குமில்லா சிறப்பு. அதனால் இவரை, ’சொற்கேட்ட முனியய்யா..’ என்றும் அழைக்கிறார்கள். முனீஸ்வரரும் சேர்ந்திருப்பதாலேயே இந்தக் கோயிலுக்கு, மேல் கூரையோ விமானமோ இல்லை. மேல் கூரை அமைக்க கோயில் நிர்வாகத்தினர் எவ்வளவோ முயற்சி எடுத்தும் அத்தனையும் தட்டிப் போய்விட்டதாம். இதனால், சுற்று மண்டபம் உள்ளிட்டவைகளை அமைத்துவிட்டு விநாயகரின் தலைக்கு மேலே பறவைகள் எச்சமிடாமல் இருப்பதற்காக லேசாக தென்னங் கூரை மட்டும் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். எந்தப் பக்கமிருந்தும் விநாயகரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, விநாயகர் சந்நிதியைச் சுற்றிலும் கம்பித் தடுப்பு மட்டுமே அமைத்திருக்கிறார்கள்.

சொற்கேட்ட விநாயகரின் திறந்தவெளி சுற்றுப் பிரகாரத்தில் ராகு, கேது, முருகன், தட்சிணாமூர்த்தி சந்நிதிகள் இருக்கின்றன. வடக்கில் இருக்கும் குருந்த மரத்தில் மரத் தொட்டில்களும் பிரார்த்தனை சீட்டுகளும் ஏராளமாய் கட்டித் தொங்குகின்றன. ”இதைப் பார்த்தாலே, பக்தர்களின் குறைகளை சொற்கேட்ட ஐயா எப்படி காதுகொடுத்துக் கேட்கிறார் என்பது புரியும்” என்கிறார்கள் பலன் கண்டவர்கள்.

சம்பளத்தில் ஒரு பகுதி

சொற்கேட்டானிடம் வேண்டுதல் வைத்து, வெளிநாட்டு வேலைகளுக்குப் போனவர்கள் இந்தப் பகுதியில் ஏராளம் இருக்கிறார்கள். இப்படிப் போகிறவர்களில் பெரும் பகுதியினர் தங்களது முதல் மாத ஊதியத்தில் ஒரு பகுதியை சொற்கேட்டானுக்கே செலவுசெய்கிறார்கள். இது இன்றைக்கும் நடக்கிறது. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இங்கே திரளான பக்தர்கள் கூட்டத்தைப் பார்க்க முடியும். சொற்கேட்ட விநாயகர் மரத்து நிழலில் அமர்ந்திருந்தாலும் இவரைச் சுற்றி அன்னதான மண்டபம், இலவச திருமண மண்டபம் உள்ளிட்டவை அனைத்து வசதிகளுடன் எழும்பி நிற்கின்றன.

மாசி மாதம் மகா சிவராத்திரி விழா, ஐயா வாசலில் அமோகமாய் நடக்கிறது. அன்று மாலை, ஊருக்குள் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அன்று தங்க அங்கியில் ஜொலிப்பார் சொற்கேட்டான். அன்றிரவு ஐந்து இடங்களில் அன்னதானம் நடக்கும். அத்தனையிலும் கூட்டம் நிரம்பி வழியும். இதையடுத்து, பங்குனி மாதத்தில் பேட்டையார்களால் பூச்சொரிதல் விழா எடுக்கப்படுகிறது. இதற்காக, வேலங்குடி மற்றும் கோட்டையூர் பகுதிகளில் இருந்து பூத்தட்டுகள் எடுத்துவரப்பட்டு விநாயகருக்கு பூச்சொரியப்படும்.

முத்து அங்கி

விநாயகர் சதுர்த்தியன்று, சொற்கேட்ட விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அன்று ஒருநாள் மட்டும் முத்து அங்கியில் ஐயாவை தரிசிக்கலாம். சதுர்த்தி அன்றும் அன்னதானம் உண்டு. எந்தவொரு காரியத்தில் இறங்கும் முன்பும் கோயிலில் போய் திருவுளம் கேட்பதைச் சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள். சொற்கேட்ட விநாயகர் ஆலயத்திலும் அப்படி திருவுளம் கேட்கப்படுகிறது. பூஜையெல்லாம் முடிந்தபிறகு, இரவு ஒன்பது மணிக்கு மேல், சொற்கேட்ட விநாயகர் சந்நிதியில் போய் அமைதியாக உட்கார்ந்தால், விநாயகரின் தலைக்கு மேலிருந்து கவுலி திருவுளம் சொல்லுமாம்.

x