வைகாசி விசாக திருவிழா: நாதன்கோயில் ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் தேரோட்டம்


கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாதன்கோயில் ஜகன்நாதப்பெருமாள் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று தேரோட்டம் நடைபெற்றது.

நாதன்கோயில் ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கடந்த கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் தாயார் பெருமாள் புறப்பாடு நடைபெற்று வந்தது. 28-ம் தேதி பெருமாள் உள்பிரகாரப் புறப்பாடு, உற்சவர் திருமஞ்சனமும் மாலையில் திருக்கல்யாணமும் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை கட்டுத்தேரோட்டம் நடைபெற்றது.

தேரில் ஸ்ரீ தேவி - பூ தேவி உடனாய ஜகந்நாதப்பெருமாள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து, தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஜகந்நாதப்பெருமாள் கைகர்ய சபா மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

x