உலக மக்களுக்கு ஜெயேந்திரரின் செய்தி


காஞ்சி சங்கர மடத்தின் 69-வது பீடாதிபதியான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். ‘சாதி மத வித்தியாசம் பாராமல் அனைவரையும் சமமாக அணுகியவர்’ என்று மடத்துக்கு நெருக்கமானவர்களும் அவரை அருகிலிருந்து பார்த்தவர்களும் சொல்கிறார்கள்.

“காஞ்சியில் சங்கர மடத்தைச் சுற்றிப் பல இஸ்லாமியர்கள் வசித்தனர். அடிக்கடி அவர்களை அழைப்பார் ஜெயேந்திரர். வசதிகள் குறித்தெல்லாம் கேட்டு, தேவையானதை செய்துகொடுப்பார்.

“ஒரு ஏழை கிறிஸ்தவப் பெண்ணுக்கு காலடி மடத்தின் மூலமாக அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்தார். அவரது படிப்புக்கான முழுச் செலவையும் காலடி சங்கர மடம் ஏற்றுக்கொண்டது’’ என்கிறார் ஜெயேந்திரருடன் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய டி.வி.ஆர். சாரி.

“வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களை அழைத்துவரச்சொல்லி, நவராத்திரியின்போது கச்சேரி நடத்த வைத்தார். கிட்டத்தட்ட நூறு நூற்றைம்பது பேருக்கு, சங்கர மடத்தின் ‘ஆஸ்தான வித்வான்கள்’ என்று பட்டமும் கொடுத்து கெளரவித்தார். இப்படியான புதுமைகளை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், கடைசி வரை செய்துகொண்டே இருந்தார்’’ என்கிறார் சாரி.

x