அம்பேத்கர் பிறந்த தினம்: 134 நிமிடங்களுக்கு தவில், நாதஸ்வர கலைஞர்கள் தொடர் இசை நிகழ்வு!


புதுச்சேரி: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு134 நிமிடங்கள் 70 தவில், நாதஸ்வர கலைஞர்களின் தொடர் இசை நிகழ்வு நிகழ்த்தப்பட்டது.

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி பாகூரில் அம்பேத்கர் சிலை வளாகத்தில் கலைமாமணி விஜயகுமாரின் ஒருங்கிணைப்பில் 70 தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் 134 நிமிடங்கள் தொடர் இசை நிகழ்ச்சி இன்று நடத்தினர்.

அந்நிகழ்வு நிகழ்ந்த பிறகு ஈச் உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் அளித்தது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, பாகூர் எம்எல்ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அத்துடன் இசை நிகழ்வில் பங்கேற்ற 70 தவில், நாதஸ்வர இசைக் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். பங்கேற்றோர் கூறுகையில், "அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் எங்களுக்கு அறிந்த இசை மூலம் இந்நிகழ்வை நிகழ்த்தினோம்" என்றனர்.

x