தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற பிம்ஸ்டெக் . உச்சிமாநாட்டுக்கு இடையே வங்கதேச இடைக்கால அரசின ஆலோசகர் முகமது யூனஸை, பிரதமர் மோடி நேற்று முதல் முறையாக சந்தித்து பேசினார்.
பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தாய்லாந்து சென்றார். இந்த மாநாட்டுக்கு இடையே வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனஸை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் இருந்தனர். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு, இரு தலைவர்களும் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து பிரதமர் மோடி இந்தியாவின் கவலையை தெரிவித்தார். வடகிழக்கு மாநிலங்கள் பற்றியும், வங்கதேச கடல் பகுதிக்கு உரிமை கோருவது பற்றியும் சீன பயணத்தில் அவர் தெரிவித்த கருத்துக்களை எதிர்காலத்தில் தவிர்க்கும்படியும் பிரதமர் மோடி கூறினார். வங்கதேசத்தின் ஜனநாயகம், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்பதையும் பிரதமர் மோடி வலியறுத்தினார். இரு நாடுகள் இடையே நீண்டகாலமாக நிலவும் ஒத்துழைப்பு காரணமாக இருநாட்டு மக்களும் பயனடைந்துள்ளதையும் பிரதமர் மோடி சுட்டிக் காட்டினார். வங்கதேசத்துடன் ஆக்கப்பூர்வமான உறவை வளர்க்க இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்