டூபிளசிஸ், அபிஷேக் போரல் அதிரடி: ஹைதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்


விசாகப்பட்டினம்: ஐபிஎல் கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை வீழ்த்​தி​யது.

விசாகப்​பட்​டினத்​தில் நேற்று பிற்​பகல் 3.30 மணிக்கு இந்த ஆட்​டம் நடை​பெற்​றது. இதில் முதலில் விளை​யாடிய ஹைத​ரா​பாத் அணி 18.4 ஓவர்​களில் அனைத்து விக்​கெட்​களை​யும் இழந்து 163 ரன்​களை எடுத்​தது.

தொடக்க ஆட்​டக்​காரர்​களாக களமிறங்​கிய அபிஷேக் சர்மா 1, டிரா​விஸ் ஹெட் 22 ரன்​களில் பெவிலியன் வந்​தனர். பின்​னர் வந்த இஷான் கிஷன் 2, நிதிஷ் ரெட்டி ரன் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தனர். இதனால் அந்த அணி 4 விக்​கெட் இழப்​புக்கு 37 ரன்​கள் என்ற நிலைக்​குத் தள்​ளப்​பட்​டது. ஆனால் 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த ஹென்​ரிச் கிளாசெனும், அனிகெட் வர்​மா​வும் அதிரடி​யாக விளை​யாடி ஸ்கோரை உயர்த்​தினர். கிளாசென் 19 பந்​துகளில் 2 சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​கள் எடுத்​தார். மறு​முனை​யில் அதிரடி காட்​டிய அனிகெட் வர்​மா, சிக்​ஸர், பவுண்​டரி​களாக பறக்​க​விட்​டார்.

41 பந்​துகளில் 5 பவுண்​டரி, 6 சிக்​ஸர்​களை விளாசிய அவர் 74 ரன்​களில் அவுட்​டா​னார். அபிநவ் மனோகர் 4, கேப்​டன் பாட் கம்​மின்ஸ் 2, வியான் முல்​டர் 9, ஹர்​ஷல் படேல் 5 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். முகமது ஷமி ஒரு ரன்​னுடன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். ஸ்டார்க் 5 விக்​கெட்​களை​யும், குல்​தீப் யாதவ் 3, மோஹித் சர்மா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர்.

இதைத் தொடர்ந்து விளை​யாடிய டெல்லி அணி 16 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 166 ரன்​கள் எடுத்து 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டது. தொடக்க ஆட்​டக்​காரர்​கள் ஜேக் பிரேசர் மெக்​கர்க் 38 ரன்​களும் (32 பந்​துகள், 4 பவுண்​டரி, 2 சிக்​ஸர்), டூ பிளசிஸ் 50 ரன்​களும் (27 பந்​துகள், 3 பவுண்​டரி, 3 சிக்​ஸர்) எடுத்து ஆட்​ட​மிழந்​தனர்.

கே.எல். ராகுல் 5 பந்​துகளில் 15 ரன்​கள் சேர்த்து ஜீஷன் அன்​சாரி பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இதைத் தொடர்ந்து அதிரடி​யாக விளை​யாடிய அபிஷேக் போரல் 34 ரன்​களும், டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 21 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். ஹைத​ரா​பாத் அணி​யின் ஜீஷன் அன்​சாரி 3 விக்​கெட்​டைக் கைப்​பற்​றி​னார். இதன்​மூலம் டெல்லி அணி தான் விளை​யாடிய 2 போட்​டிகளி​லும் வெற்றி பெற்று 4 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 2-ம் இடத்​தில் உள்​ளது. 5 விக்​கெட் வீழ்த்​திய மிட்​செல் ஸ்டார்க் ஆட்​ட​நாயகன்​ விருது பெற்​றார்​.

x