முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது நியூஸிலாந்து


நேப்பியர்: நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் 73 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது பாகிஸ்​தான் அணி.

நேப்​பியர் நகரில் நேற்று நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 50 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 344 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக மார்க் சாப்​மேன் 111 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 13 பவுண்​டரி​களு​டன் 132 ரன்​கள் விளாசி​னார். டேரில் மிட்​செல் 84 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 76 ரன்​களும் முகமது அப்​பாஸ் 26 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 52 ரன்​களும் விளாசினர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் பந்​து​வீச்​சில் இர்​பான் கான் 3 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். அகிப் ஜாவேத், ஹாரிஸ் ரஃவூப் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

345 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 44.1 ஓவர்​களில் 271 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பாபர் அஸம் 83 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 78 ரன்​களும், சல்​மான் ஆகா 48 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 58 ரன்​களும் சேர்த்​தனர். தொடக்க வீரர்​ககளான உஸ்​மான் கான் 39, அப்​துல்லா ஷபிக் 36 ரன்​கள் எடுத்​தனர். நியூஸிலாந்து அணி சார்​பில் நேதன் ஸ்மித் 4 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார்.

பாகிஸ்​தான் தனது கடைசி 7 விக்​கெட்​களை 22 ரன்​களுக்கு கொத்​தாக தாரை வார்த்​தது. ஆட்ட நாயக​னாக மார்க் சாப்​மேன் தேர்​வா​னார். 73 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது ஒரு​நாள் போட்டி ஏப்ரல் 2-ம் தேதி ஹாமில்​டன் நகரில் நடை​பெறுகிறது.

பாகிஸ்​தான் அணி ஒரு கட்​டத்​தில் 39 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 249 ரன்​கள் எடுத்து வலு​வாக இருந்​தது. ஆனால்​ அதன்​ பின்​னர்​ ஆட்​டம்​ கண்​டது.

24 பந்தில் அரை சதம் விளாசி சாதனை: நியூஸிலாந்து அணியில் அறிமுக வீரராக இடம் பெற்றிருந்த பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட முகமது அப்பாஸ் 24 பந்துகளில் அரை சதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக ஆட்டத்தில் குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைந்தார் முகமது அப்பாஸ். இதற்கு முன்னர் இந்தியாவின் கிருணல் பாண்டியா 2021-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுக வீரராக களமிறங்கி 26 பந்துகளில் அரை சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. இதை தற்போது முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் முகமது அப்பாஸ்.

x