கனடா பொது தேர்தலில் இந்தியாவும், சீனாவும் தலையிட வாய்ப்பு: கனடா உளவுத் துறை குற்றச்சாட்டு


கனடாவில் அடுத்த மாதம் 28-ம் தேதி நடைபெறும் பொதுச் தேர்தலில், இந்தியாவும், சீனாவும், தலையிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என கனடா உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்திய அரசு செயல்பட்டாக கூறி, 6 இந்திய தூதரக அதகாரிகளை கனடா வெளியேற்றியது. அப்போது முதல் இருநாட்டு உறவில் விரிசல் எழுந்தது.

கனடாவில் ட்ரூடோவுக்கு பதில் மார்க் கார்னே பிரதமராக பதவியேற்றார். இவர் இந்தியாவுடனான உறவை பலப்படுத்துவேன் என கூறினார். இந்நிலையில் கனடா புலனாய்வு அறிக்கையில், ‘‘ கனடாவின் வெளியுறவு விவகாரங்களில் தீவிரமாக தலையிடுவதில் இந்தியா 2-வது நாடாக உள்ளது. இது தவறான தகவலை தந்திரமாகப் பயன்படுத்துகிறது, இதே முறையை இந்தியா எதிர்காலத்திலும் அடிக்கடி பயன்படுத்தப்படலாம். கடந்த 2021 தேர்தலில், வேட்பாளர்களுக்குத் தெரியாமலேயே, விருப்பமான வேட்பாளர்களுக்கு ரகசியமாக நிதி ஆதரவை வழங்க முயற்சித்திருக்கலாம்.’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், ‘‘ இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம். மேலும் சட்டவிரோத குடியேற்றத்தை செயல்படுத்தும் அமைப்பு மேலும் ஆதரிக்கப்படாது என்று எதிர்பார்க்கிறோம்’’ என தெரிவித்துள்ளது

x