IPL 2025: சிஎஸ்கே அணியின் புதிய பலம் என்ன?


தோனி ‘ஆசி’யுடன் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 ஐபிஎல் சீசனில் புத்தெழுச்சியுடன் களம் காண்கிறது.

டாப் ஆர்டரில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோரும், நடுவரிசையில் ஷிவம் துபேவும் பலம் சேர்ப்பர்.

பெரிதாக ஃபார்மில் இல்லை என்றாலும் ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், தீபக் ஹூடா ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்க்கக்கூடும்.

சுழலில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அகமது, ஸ்ரேயஸ் கோபால் ஆகியோர் பலம் சேர்க்கக் கூடும்.

கடந்த சில சீசன்களில் முக்கியப் பங்கு வகித்த தீக்சனா இடத்தை அஸ்வின் நிச்சயம் நிரப்புவார் என எதிர்பார்க்கலாம்.

வேகப்பந்து வீச்சில் மதீஷா பதிரனாவுடன் சேம் கரண், ஜேமி ஓவர்டன், நேதன் எல்லிஸ் ஆகியோரும் வலு சேர்க்கக் கூடும்.

இந்திய வீரர்களில் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, கமலேஷ் நாகர்கோட்டி, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடும்.

சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என இரண்டிலும் மகத்தான பலம் கொண்டுள்ளது சிஎஸ்கே.

x