ஐபிஎல் 2025 சீசனில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அணிகளுள் ஒன்றுதான் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்.
கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை. இதனால் முதல் 3 ஆட்டங்களுக்கு கேப்டன் ரியான் பராக்.
பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், நித்திஷ் ராணா, துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோர் அதிரடியால் பலம் சேர்ப்பர்.
கடந்த சீசன்களில் டாப் ஆர்டரில் பலம் சேர்த் ஜாஸ் பட்லர் இல்லாதது பின்னடைவே. அதை ரியான் பராக் நிர்வத்தி செய்யக் கூடும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, ஷுபம் துபே ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது.
பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், சந்தீப் சர்மா, பசல்ஹக் பரூக்கி, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் மத்வால் ஆகியோர் நம்பிக்கை அளிப்பர்.
சுழற்பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின், யுவேந்திர சாஹல் இல்லாத குறையை மஹீஷ் தீக்சனா, வனிந்து ஹசரங்கா பூர்த்தி செய்யலாம்.
ராஜஸ்தான் அணியில் அதிக அளவிலான ஆல்ரவுண்டர்கள் இல்லாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஹசரங்கா மட்டுமே ஆல்ரவுண்டர்.
சரியான சமநிலையைக் கண்டறிந்து, காயம் பின்னடைவுகளைத் தவிர்க்க முடிந்தால், ராஜஸ்தான் அணி 2-வது முறையாக கோப்பையை கைகளில் ஏந்தலாம்.