IPL 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பலமும், சவாலும் என்ன?


மெகா ஏலத்தில் பெரும் தொகைக்கு எடுக்கப்பட்ட ரிஷப் பந்த்தை சுற்றியே 2025 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கட்டமைக்கப்பட்டு உள்ளது.

6 வெளிநாட்டு வீரர்களில் எய்டன் மார்க் ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், மத்தேயு பிரீட்ஸ்கே, டேவிட் மில்லர் ஆகியோர் பேட்ஸ்மேன்கள்.

மே.இ.தீவுகளின் ஷமர் ஜோசப் மட்டுமே வெளிநாட்டு வீரர்களில் ஒரே பவுலர். ஆக, பவுலிங்கில் இந்திய வீரர்களை நம்பியே இருக்கிறது லக்னோ.

விளாசல் வித்தகர் மத்தேயு பிரீட்ஸ்கே லக்னோ அணியில் ஸ்டார் ஆக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் தனது இடத்தை மீண்டும் பலப்படுத்திக் கொள்ள வாய்ப்பு என்பதால், கேப்டன் ரிஷப் பந்த்துக்கு இந்த சீசன் மிகவும் முக்கியம்.

முன்வரிசையில் ரிஷப் பந்த், மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க் ரம், நிக்கோலஸ் பூரன், பின்வரிசையில் டேவிட் மில்லர், ஆயுஷ் பதோனி இருப்பது பலம்.

சுழற்பந்து வீச்சில் ஷாபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த் கூட்டணிக்கு சவால்கள் காத்திருக்கின்றன.

வேகப்பந்து வீச்சில் அவேஷ் கான், ஆகாஷ் தீப், மயங்க் யாதவ், மோஷின் கான், பிரின்ஸ் யாதவ், அர்ஷின் குல்கர்னி, யுவ்ராஜ் சவுத்ரி ஆகியோர் பலம்.

x