IPL 2025 Shots: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பலம் என்ன?


கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், பயிற்சியாளர் ரிக்கி பான்டிங் கூட்டணியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த கால சோதனைகளுக்கு தீர்வு காணும் என இம்முறை எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் வரிசையில் ஸ்ரேயஸ் ஐயர் 3-வது இடத்தில் களமிறங்குவது ஸ்திரத்தன்மையை அதிகரிக்கக் கூடும். அணியின் நடுவரிசையும் பலமாக உள்ளது.

கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஷ், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோர் நடுவரிசையில் அதிரடி காட்டுவர் என எதிர்பார்க்கலாம்.

வேகப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் இறுதிக்கட்ட ஓவர்களில் பலம் சேர்க்கக் கூடியவர். சுழலில் யுவேந்திர சாஹல் பலம் சேர்க்கக்கூடும்.

ஆல்ரவுண்டர் மார்கோ யான்சன், இளம் வீரர்களான யாஷ் தாக்குர், வைஷாக் விஜயகுமார், குல்தீப் சென் ஆகியோர் பந்துவீச்சில் உறுதுணை புரிவர்.

உள்ளூர் ஆட்டக்காரர்களைப் பொறுத்தவரையில் பிரப்சிம்ரன் சிங், ஷாசங் சிங், நேஹல் வதேரா, முஷீர் கான் ஆகியோரையே பஞ்சாப் நம்பியிருக்க வேண்டிய நிலை.

அனைத்து துறைகளிலும் வலுவான கொல்கத்தா அணிக்கு முற்றிலும் மாறுபட்டது என்பதால் பஞ்சாப் அணியை வழிநடத்துவது ஸ்ரேயஸுக்கு பெரிய சவால்.

x