நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி புதிய கேப்டன் அஜிங்க்ய ரஹானே தலைமையில் கோப்பையை தக்கவைக்க களமிறங்குகிறது.
மெகா ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயருக்கு கூடுதல் பொறுப்பாக துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஓட்டிஸ் கிப்சன் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது ப்ளஸ்.
வேகப்பந்து வீச்சில் வாய்ந்த வீரர்கள் இல்லாதது பின்னடைவு என்றாலும், வைபவ் அரோரா, உம்ரான் மாலிக் உள்ளிட்ட இளம் வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர்.
ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் இருந்தாலும், வளர்ந்து வரும் நட்சத்திரமான இந்தியாவின் ஹர்ஷித் ராணா மட்டுமே ஒரே நம்பிக்கை.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து கேகேஆர் வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
சீரான பேட்டிங் வரிசை கொண்ட கேகேஆர் அணியில் கடந்த சீசனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இம்முறை குயிண்டன் டி காக் அசத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
3 முறை சாம்பியனான கேகேஆர் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங்.