மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சாலை பணிகளால் விபத்து அபாயம்!


விருதுநகர்: மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாததாலும், எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் செல்வதாலும் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை எப்போதும் பரபரப் பாக காணப்படும் சாலைகளில் ஒன்று. காரணம், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தினந் தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள் மதுரை வழியாக நாட்டின் பல்வேறு இடங்களுக்கு வந்து செல்கின்றன. இரவு நேரங்களில் இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும். அதேவேளையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் விபத்துகள் ஏற்படுவதும் அதிகம். குறிப்பாக மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை பகுதியில் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

பல இடங்களில் பள்ளம் மேடுக ளாகவும், கற்கள் பெயர்ந்தும் காணப்பட்ட மதுரை- தூத்துக் குடி சாலையில் தற்போது காரியா பட்டி அருகே வக்கனாங்குண்டு பகுதியில் தொடங்கி அருப்புக் கோட்டை அருகே பந்தல்குடி வரை சாலை பராமரிப்புப் பணிகள் கடந்த ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனியார் மூலம் ரூ.130 கோடி செலவில் இப்பணிகள்மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. சாலை சீரமைப்பு பணிக்காக ஏற்கெனவே போடப்பட்ட சாலை சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாலையில் உள்ள தூசுகள், துகள்கள் கம்பிரசர் இயந்திரங் களைக் கொண்டு அகற்றப்படு கின்றன.

இப்பணிகள் காரணமாக மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் எதிரெதிர் திசைகளில் திருப்பி விடப்படு கின்றன. கம்பிரசர் தூசு காரணமாக சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதோடு, சாலையின் நடுவே தடுப்புகள் இல்லாததாலும், வளைவுகளில் எச்சரிக்கை பலகைகள் இல்லாத தாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை இயக்குகின்றனர்.

இதுகுறித்து, தூத்துக் குடியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சண்முகம் கூறுகையில், தினமும் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கும் மதுரை, திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கும் லாரி ஓட்டி வருகிறேன். ஆனால், எங்கும் இல்லாத அளவுக்கு மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை மோசமாக உள்ளது. சாலை பராமரிப்பு பணி நடைபெறுவதால் எதிர் திசையில் வாகனங்கள் செல்கின்றன. எச்சரிக்கை பலகை, தடுப்புகள். வெள்ளை கோடுகள், சிவப்பு நிற கூம்புகள் போன்றவை

இல்லாததால் வாகனங்களை ஓட்டுவது சிரமமாக உள்ளது. இருசக்கர வாகனங்களும் எதிர் திசையில் செல்வதால் அடிக்கடி இச்சாலையில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் பகுதிகளில் முறையான எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

இரவு நேரத்தில் ஒளிரும் தடுப்புகள் வைக்க வேண்டும். அதோடு,சாலை சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதிதாக சாலை போடப்பட்ட பகுதியில் பக்கவாட்டிலும், நடுவிலும் வெள்ளை கோடுகள் உடன டியாக போடப்பட வேண்டும். அப்போதுதான் விபத்துகளை தடுக்க முடியும். என்றார்.

x