பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து: வெளியிட்ட முக்கிய பதிவு!


சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

தமிழக பள்ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்பு​களுக்கு பொதுத் தேர்வு நடத்​தப்​பட்டு வருகிறது. அதன்படி நடப்​பாண்​டுக்கான பிளஸ் 2 பொதுத்​தேர்வு இன்று (​மார்ச் 3) தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்​ளது. முதல்​நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்​களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 3,316 தேர்வு மையங்​களில் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்​றனர். இதில் 7,518 பள்ளி​களில் இருந்து 8 லட்சத்து 02,568 மாணவர்​கள், 18,344 தனித்​தேர்​வர்கள் மற்றும் 145 கைதி​களும் அடங்​கு​வர்.

பொதுத்​தேர்​வுக்கான அறைக் கண்காணிப்​பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுத்​தப்பட உள்ளனர். மேலும், முறை​கேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சி​யர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமை​யிலும் சிறப்பு கண்காணிப்​புக் குழுக்கள் ஏற்படுத்​தப்​பட்​டுள்ளன. மேலும், சுமார் 154 வினாத்​தாள் கட்டுக்​காப்பு மையங்​களில் 24 மணி நேரம் ஆயுதம்
தாங்கிய காவல்​துறை அதிகாரிகள் பாது​காப்பு பணியில் ஈடுபடு​வார்​கள்.

x