கடைசி ஆட்டம் மழையால் ரத்து: வெற்றி பெறாமலேயே தொடரை நிறைவு செய்தது பாகிஸ்தான்


ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று ராவல்பிண்டியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் மோதுவதாக இருந்தன. ஆனால் மழை மற்றும் ஈரப்பதம் காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இரு அணிகளும் ஏற்கெனவே அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருந்தன.

கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை பெற்று தொடரை நிறைவு செய்யும் முனைப்பில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு ஆட்டம் ரத்து செய்யப்பட்டது ஏமாற்றத்தை அளித்தது. இதனால் சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் தொடரில் இருந்து வெளியேறி உள்ளது பாகிஸ்தான் அணி. வங்கதேசமும் வெற்றியே இல்லாமல் நடையை கட்டி உள்ளது. இரு அணிகளுமே நியூஸிலாந்து, இந்தியாவிடம் லீக் ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்தன.

x