துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இந்திய அணி. இப்போட்டியின் சுவாரஸ்ய தகவல்கள் இதோ...
இந்தப் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முகமது ஷமி 200 விக்கெட்டுகளை ஒருநாள் கிரிக்கெட்டில் வீழ்த்தினார். அதாவது 5,126 பந்துகளில் ஷமி 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி குறைந்த பந்துகளில் 200 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்தார்.
இதற்கு முன்னால் மிட்செல் ஸ்டார்க் 5,140 பந்துகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது சாதனையாக இருந்தது. மேலும் சக்லைன் முஷ்டாக் 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்ட ஷமியும் 104 போட்டிகளில் இதே மைல்கல்லை எட்டியுள்ளார். மிட்செல் ஸ்டார்க் 102 போட்டிகளில் 200 மைல்கலை எட்டி சாதனையை தன் வசம் வைத்துள்ளார்.
அதேபோல் ரோஹித் சர்மா 261 இன்னிங்ஸ்களில் 11,000 ரன்கள் மைல்கல்லை எட்டினார். 10 பேட்டர்களில் அதிவேக 11 ஆயிரம் ரன்களில் 2-வது இடம் பிடித்துள்ளார் ரோஹித் சர்மா. விராட் கோலி 222 இன்னிங்ஸ்களில் 11 ஆயிரம் ரன்களை எட்டி சாதனையை தன் வசம் வைத்துள்ளார். ரோஹித் சர்மா 11 ஆயிரம் ரன்களை 11,868 பந்துகளில் எடுக்க, விராட் கோலி 11,831 பந்துகளில் 11 ஆயிரம் ரன்களை எடுத்தார்.
156 கேட்ச்களை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் எடுத்து விராட் கோலி, முகமது அசாருதின் சாதனையைச் சமன் செய்தார். பீல்டராக மகேலா ஜெயவர்தனே 218 கேட்ச்களையும் ரிக்கி பாண்டிங் 160 கேட்ச்களையும் எடுத்துள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 5,476 பந்துகளுக்குப் பிறகு முதல் நோ-பாலை நேற்று வீசினார். இதுவரை 108 ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் ஓவர் ஸ்டெப் செய்ததில்லை.
51 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 8-வது சதம் எடுத்து கில் ஒரு சாதனை புரிந்துள்ளார். ஷிகர் தவான் 8-வது ஒருநாள் சதத்தை எடுத்த போது 57 இன்னிங்ஸ்களை ஆடியிருந்தார்.
மிடில் ஓவர்களில் விக்கெட்டே எடுக்காத 5வது தருணமாக இந்தியாவுக்கு நேற்றைய போட்டி அமைந்தது. 2002-க்குப் பிறகு 5 முறை இந்திய அணியினால் 11-வது ஓவர் முதல் 40-வது ஓவர் வரை ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை.
2023-லிருந்து ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் நேற்று ஜாகிர் அலிக்கு விட்ட கேட்சோடு 10 கேட்ச்களை டிராப் செய்துள்ளார். 22 கேட்ச் வாய்ப்புகளில் 12 கேட்ச்களை மட்டுமே அவர் 2023 முதல் எடுத்துள்ளார். இது ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தகவல்களின் படி மோசமான ஒரு சாதனையாகும். ஐசிசி ஒருநாள் தொடர்களில் ஷமி 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஜாகீர் கானின் 59 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்துள்ளார்.