FICCI மீடியா கான்கிளேவ்: சவுத் கனெக்ட் 2025-ஐ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


சென்னை: இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) சார்பில் இன்றும் நாளையும் (பிப். 21, 22) இரண்டு நாள் நிகழ்வாக நடைபெறும் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் வணிக கான்கிளேவ்: சவுத் கனெக்ட் 2025-ஐ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஒருங்கிணைத்துள்ளது.

மாற்றத்தை நோக்கியுள்ள இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறையில் பிராந்திய ரீதியான பங்களிப்பு முக்கியமானதாக அமைந்துள்ளது. இந்த சூழலில் இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த தொழில்துறை சார்ந்து இயங்கும் கன்டென்ட் கிரியேட்டர்கள், பாலிசிமேக்கர்ஸ், டெக் வல்லுநர்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையாளர்களை ஒன்று சேர்க்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதில் திரைத்துறை, தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன் மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு போன்றவற்றின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் பல்வேறு தலைப்புகளின் கீழ் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு: www.frames.ficci.in/mebc தளத்தை அணுகலாம்.

x