லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நாளை (19-ம் தேதி) தொடங்குகிறது. பொதுவாக போட்டி நடைபெறும் மைதானங்களில் தொடரில் கலந்து கொள்ளும் நாடுகளின் கொடிகள் ஏற்றப்படுவது வழக்கம்.
ஆனால் லாகூர் மைதானத்தில் ஏற்றப்பட்ட கொடிகளில் இந்திய கொடி இடம் பெறவில்லை. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்துகொள்ளும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. இதை கருத்தில் கொண்டே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு மைதானங்களில் இந்திய கொடியை ஏற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.