ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாட்டம்: 2025 ஐபிஎல் சீசனுக்கு புது கேப்டனை அறிவித்தது அணி நிர்வாகம்!


பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதாரை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை 2021ஆம் ஆண்டில், விராட் கோலி ராஜினாமா செய்தப் பிறகு, கடந்த 3 சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக டூ பிளிஸ்சிஸ் இருந்தார். இவரது தலைமையில் ஆர்சிபி அணி தொடர்ந்து படுமோசமாக சொதப்பியது.

கோலிக்கு பிறகு, கேப்டனாக பொறுப்பேற்ற பாப் டூ பிளஸிசிஸ், அணிக்கு 21 வெற்றிகளையும், 42 தோல்விகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால்தான், 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்திற்குமுன், அவரை ஆர்சிபி அணி கழட்டிவிட்டது. இந்த நிலையில் தான் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கபட்டுள்ளார்.

2021 பெங்களூரு அணியில் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரஜத் படிதார், 2022 சீசனில் ஆர்சிபி அணிக்கு மாற்று வீரராக வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் கடந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்ல படிதாரும் ஒரு மிக முக்கிய காரணமாக இருந்தார். 31 வயதான மிடில்-ஆர்டர் பேட்டரான படிதார், ஆர்சிபி அணிக்காக 27 போட்டிகளில் விளையாடி 158.85 ஸ்டிரைக் ரேட்டில் 799 ரன்கள் எடுத்துள்ளார்.

பெங்களூரு அணி விவரம்: ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி,யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, ஜவ்து பந்தேக், ஜவ்டு பெட்டேல் சிகாரா, லுங்கி என்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதீ.

x