10 நாட்களாக தொடர்ந்து அதிகரித்த நிலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 குறைவு


தங்கம் விலை கடந்த 10 நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்று பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.63,520-க்கு விற்பனையானது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. வரலாறு காணாத உச்சமாக நேற்று முன்தினம் ஒரு பவுன் விலை ரூ.64,480 ஆக அதிகரித்தது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.120 என பவுனுக்கு ரூ.960 குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.7,940-க்கும், ஒரு பவுன் ரூ.63,520-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,661, ஒரு பவுன் ரூ.69,288 என இருந்தது.

கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சங்களை தொட்டுவந்த நிலையில், நேற்று விலை குறைந்தது நகை வாங்குவோருக்கு நிம்மதியை அளித்துள்ளது.

வெள்ளி விலை நேற்று மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளி விலை ரூ.1,07,000 ஆக இருந்தது

x