புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!


சமையல் எரிவாயு சிலிண்டர்

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திலும் வரிகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர்

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இந்த மாற்றத்தை செய்து வருகின்றன. அதன்படி வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று ஜனவரி மாதத்தின் முதல் நாளில் குறைந்துள்ளன.

இன்று (ஜனவரி 1) விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 4.50 குறைந்துள்ளது. ஏற்கெனவே 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் ரூ. 1,929-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதன் மூலம் 1,924.50 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

x