சொகுசு காரில் வந்து கீரை விற்கும் விவசாயி... வைரலாகும் வீடியோ!


கீரை விவசாயி சுஜீத்

கேரளாவில் சொகுசு காரில் வந்து கீரை விற்பனை செய்யும் விவசாயி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

விவசாயிகள் என்றாலே பிரச்சனை என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் கேரளாவில் கீரை விவசாயி ஒருவர் தன்னுடைய ஆடி காரில் வந்து கீரை விற்பனை செய்யும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கேரளாவை சேர்ந்த சுஜித் என்ற விவசாயி தனது வெள்ளை நிற ஆடி காரில் காய்கறி மார்க்கெட்டை அடைகிறார். அதன் பிறகு, காரை நிறுத்திவிட்டு லுங்கியை கழற்றி வைத்துவிட்டு, முழுக்க முழுக்க காய்கறி விற்பவர் போல உடைகளை மாற்றக் கொள்கிறார்.

அரை பேன்ட் மற்றும் டீ-சர்ட் அணிந்த பிறகு, அவர் ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் இருந்து பிளாஸ்டிக் விரிப்பை எடுத்து தரையில் பரப்பி அதன் மீது காய்கறிகளை வைத்து விற்பனையை தொடங்குகிறார். காய்கறிகளை எல்லாம் விற்றுவிட்டு மீண்டும் லுங்கி அணிந்து ஆட்டோ ரிக்ஷாவில் விரிப்பை போட்டுவிட்டு அங்கிருந்து காரில் கிளம்பிச் செல்கிறார்.

இந்த வீடியோ 4.50 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ளது. ஏராளமான பயனர்கள் தங்கள் கருத்துக்களைக் கருத்துத் தெரிவித்தனர். இன்ஸ்டாகிராம் பயனரான சுஜீத் ஒரு விவசாயி. கடந்த 10 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருவதாகவும், மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பயோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

x