வங்கி கடன் வாங்கியவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து ரிசர்வ் வங்கி விரிவான வழிகாட்டுதல் இன்று வெளியிட்டுள்ளது. அதில், கடன் வாங்கியவர்களிடம் வங்கிகள் அபராத வட்டிகள் வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகள் மறைமுக கட்டணங்கள் வசூலிப்பதாக தொடர் புகார் எழுந்து வந்த நிலையில் இந்த அறிவுறுத்தல்களை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. மேலும் மாறுபட்ட வட்டிவிகிதத்தில் இருந்து நிலையான வட்டிக்கு மாறும்போது கட்டணத்தில் வெளிப்படைத் தன்மை தேவை. தவணைத் தொகை அல்லது செலுத்தும் கால அளவை வாடிக்கையாளர் விருப்பப்படி மாற அனுமதிக்க வேண்டும்.
அபராதம் என கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டணங்கள் வசூலிக்க வேண்டும். கடன்கள் வசூலிக்கும் போது அந்த கட்டணங்கள் குறித்த வெளிப்படைத் தன்மை வேண்டும். அதனை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.