ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை... இன்றைய விலை தெரியுமா?


தங்கம் சரவனுக்கு ரூ.120 குறைந்தது

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த நிலையில், இன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்து தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. தினந்தோறும் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 20 ரூபாய் வரை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 16ஆம் தேதி துவங்கி நேற்று வரை தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு சுமார் 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நகை வாங்குவோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று தங்கத்தின் விலை சற்று சரிவைச் சந்தித்துள்ளது.

4 நாட்களுக்கு பிறகு சற்றே குறைந்த தங்கம் விலை

இன்று வர்த்தகம் துவங்கிய போது, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15 ரூபாய் குறைந்து ரூ.5,785க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 46, 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையை விட 120 ரூபாய் குறைவாகும்.

பார் வெள்ளி

இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு 50 பைசா அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் நேற்று 77.50 விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, இன்று 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி, 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் விஜய் கட்சியினர் மீது வழக்குப் பாய்ந்தது... கொடியும் அகற்றம்!

x