பிறந்து 72 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நந்தன் - பிரியங்கா தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு சரண்யா என்று பெயரிட்ட பெற்றோர், குழந்தையை உலகம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கக்கூடிய அளவுக்கு சாதனை ஒன்றை செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தனர்.
அதற்காக குழந்தைக்கு தேவையான ஆவணங்களை பெறும் முயற்சியில் இறங்கினர். பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஒவ்வொரு ஆவணமாக கடந்த 70 நாட்களில் மும்முரமாக செயல்பட்டு முறைப்படி பெற்று வந்தனர். இந்நிலையில் மொத்தம் 31 வகையான ஆவணங்களை குழந்தை சரண்யா பெயரில் அவர்கள் வாங்கியுள்ளனர்.
இதற்கு முன்பு ஒரு பெண் குழந்தை 28 வகையான சான்றிதழ்களை பெற்றிருந்ததே உலக சாதனையாக கருதப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குழந்தை சரண்யா பெயரில் 31 வகையான சான்றிதழ்கள் பெறப்பட்டிருப்பதால் உலக சாதனைக்காக அவர்கள் தகவல்களையும், ஆவணங்களையும் அனுப்பினர். இதையடுத்து குழந்தை சரண்யாவின் பெயர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் உலக சாதனை புத்தக அதிகாரிகள் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி… தடம் புரண்ட விரைவு ரயில்... 6 பேர் பலி... பலர் காயம்!