ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி


ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என ஆர்பிஐ அறிவித்துள்ளது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மே 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் மட்டும் ஆர்பிஐ தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் சுமார் 250 அடிப்படை புள்ளிகள் அதாவது 2.5 சதவீதம் வரையில் உயர்த்தியது. இதன் பின்பு நடந்த ஏப்ரல், ஜூன், ஆகஸ்ட் கூட்டத்தில் ஆர்பிஐ தனது வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை.

இந்த நிலையில் அக்டோபர் 4ம் தேதி நடந்த கூட்டத்தின் முடிவுகள் வெளியாகி உள்ளன. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x