கண்டுக்கவே ‘கவனிக்க’ணும்!


அமைச்சரை வைத்து ஏதாவது காரியம் நடக்கவேண்டுமானால் தான் முன்பெல்லாம் ‘கட்டிங்’ பேசுவார்கள். ஆனால் திருச்செந்தூர் பக்கம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்திக்க வேண்டும் என்றாலே ‘கவனிக்கச்’ சொல்கிறார்களாம் அவரது அடிவருடிகள். இந்த விஷயத்தில் அமைச்சரின் அரசியல் பி.ஏ-வான கிருபாகரனும் அமைச்சருக்கு நிழலாக வலம் வரும் உமரிசங்கரும் புகுந்து விளையாடுவதாக புகார் சொல்கிறார்கள். இவர்களை ‘கவனித்தால்’ தான் ஆளும் கட்சியினரே அமைச்சரை சந்திக்க முடிகிறதாம். இவர்கள் இருவரும் அனிதாவிடம் எந்நேரமும் ஒட்டிக்கொண்டு இருப்பதால் இதுபற்றி அவரிடம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் உளன்று கொண்டிருக்கும் உள்ளூர் உடன்பிறப்புகள், “நீங்களாவது இதை அண்ணன் காதுல போடக்கூடாதா?” என தங்களுக்கு நெருக்கமான பத்திரிகை யாளர்களிடம் பரிதாபமாய்க் கேட்கிறார்களாம்.

x