சென்னையில் 1,448 அரசுப் பள்ளிகளில் ஆய்வு


லேடி வெலிங்டன் பள்ளியில் ஆய்வு..

நெல்லையில் பள்ளிக்கூட கழிப்பறைச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக் கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பழமையான லேடி வெலிங்டன் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் மற்றும் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் லால் பகதூர், மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் லால் பகதூர் ,“சென்னையில் 1,448 அரசுப் பள்ளிகள் உள்ளன. அவற்றை முழுமையாக ஆய்வு செய்ய 48 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுவில் பொதுப்பணித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

லேடி வெலிங்டன் பள்ளியில் ஆய்வு..

சரி செய்யக்கூடிய நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடங்கள் உடனடியாக சரிசெய்யப்படும், பழுதடைந்த கட்டிடங்கள் உடனே இடித்து அரசு செலவில் புதிய கட்டிடங்கள் கட்டித்தரப்படும். குறிப்பாக அனைத்துப் பள்ளிகளிலும் சுவர் விரிசல், தண்ணீர் கசிவு, மேல் கூரை உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்படும்.

தற்போது லேடி வெலிங்டன் பள்ளியை ஆய்வு செய்ததில், 6 கட்டிடங்கள் இடிக்கும் நிலையிலும், 4 கட்டிடங்கள் மறுசீரமைப்பு செய்யவேண்டிய நிலையிலும் உள்ளன. மேலும் சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடுத்த 3 நாட்களில் கட்டிட உறுதித்தன்மை ஆய்வு செய்யப்படும்” என்றார்.

x