சீமான் என்ன ஸ்லீப்பர் செல்லா?
நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டிருந்தாலும், ஒரே ஒரு பேட்டியில் இணைய ட்ரெண்டிங்கில் டாப்பில் அமர்ந்திருக்கிறார் அதிபர் சீமான். திமுகவின் 100 நாள் ஆட்சி பற்றி கருத்து தெரிவித்தது முதல் கே.டி.ராகவனுக்கு முட்டு கொடுத்தது வரை, அவரது ஒவ்வொரு பதிலையும் நெட்டிசன்கள் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். “யாரும் செய்யாததையா அவர் செஞ்சிட்டாரு” என்று சீமான் சொன்னதுதான் தாமதம். சமூக வலைதளங்களில் மீம்கள், கருத்துகள் பறந்தன. இதற்கு முன், சீமான் பாஜகவுக்கு ஆதரவானவர் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் கூட, அவரது தம்பிகள் அதையெல்லாம் நம்பாமல் அவருக்கு முட்டுக் கொடுத்தனர். இன்று கே.டி.ராகவன் விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகப் பேசியதில், தம்பிகளே கொஞ்சம் ஆடிப்போய்த்தான் இருக்கிறார்கள். ‘எச்.ராஜாவே அமைதியாக இருக்கும்போது, ஆமைக்கறி அதிபர் ஏன் வான்டடாக வண்டி ஏறுகிறார்’ என்ற கேள்வி அவர்களிடம் எழாமல் இல்லை. ‘சீமான் பாஜகவோட ஸ்லீப்பர் செல் தான்; இந்தப் பேட்டியே அவருக்கு பாஜக கொடுத்த அசைன்மென்ட் தான்’ என்றும் இன்னொருபக்கம் வதந்தி பரப்புகிறார்கள்.
***
வலிமை என்ற பெயரில் சிமென்ட் அறிமுகம்.
- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
வலிமை அப்டேட்டை போனி கபூர் விடுவார்னு பார்த்தா, தங்கம் தென்னரசு விடறாரு!
- ரஹீம் கஸ்ஸாலி
***
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவை விடச் சிறந்த ஆட்சியை அன்புமணி தருவார்.
- ராமதாஸ்
அப்படினா... இனிமே மாற்றம், முன்னேற்றம் சிங்கப்பூர்னு சொல்லுங்கோ மருத்துவர் ஐயா!
- தா.நிவேதா
***
வரும் காலத்தில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சியை பிடிக்கும்.
- அண்ணாமலை
ஆட்சியை அப்புறம் பிடிக்கலாம் முதல்ல வீடியோ பிடிக்காம இருங்கப்பா!
- ஷேக்பரித்
***
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
- பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இப்ப எங்கயும் தேர்தல் நடக்கலியே முருகேசா?!
- இதயவன்
***
நான் ஒரு தியாகியின் மகன். தியாகிகளை அவமதிப்பதை சகித்துக்கொள்ள மாட்டேன்.
- ராகுல் காந்தி
ஏழைத் தாயின் மகனுக்கே டஃப் கொடுப்பாரு போலிருக்கே!
- பனைமரம்
***
மக்கள் விரைவில் திரையரங்குகளுக்கு திரும்புவார்கள்.
- நடிகர் விஷால்
அலை அலையாவா பாஸ்..?!
- மயக்குநன்