இந்த மைக்கில் பேச மாட்டேன்!


காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பேசும் ஜெயக்குமார்

ஆர்ப்பாட்டத்தின் போது, ‘சின்ன மைக்கில் பேச மாட்டேன்’ என காங்கிரஸ் எம்.பி திடீரென கோபித்துக் கொண்ட சம்பவம், நாகர்கோவிலில் காங்கிரஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து எம்.பியை சமாதானப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளச் செய்தனர்.

மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்குத் தொடர்ந்து தாரைவார்ப்பதைக் கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவிலில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விஜய் வசந்த் எம்.பியோடு, திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி டாக்டர் ஜெயக்குமாரும் கலந்து கொண்டார். மறைந்த வசந்தகுமாரின் சொந்த ஊரில் கட்டப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தவே, குமரி மாவட்டம் வந்திருந்தார் ஜெயக்குமார். வந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஆஜர் கொடுத்தார்.

ஜெயக்குமாரை சமாதானம் செய்யும் குமரி காங்கிரஸார்

ஆர்ப்பாட்டத்துக்கு அதிக சப்தம் இல்லாத சிறிய ரக மைக்கை பயன்படுத்தியிருந்தனர். இந்த மைக் சப்தம் இல்லையென பேச மறுத்துவிட்டார் ஜெயக்குமார். இதனால் கருத்து முரண்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் இருந்து ஒதுங்கியும் நின்று கொண்டார். உடனே, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர். அதன் பிறகு, ஒருவழியாக அந்த மைக்கில் ஜெயக்குமார் பேசினார். இந்த சம்பவம் குமரி காங்கிரஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

x