களையெடுக்கப்படும் கேரள காங்கிரஸ்!


கேரள காங்கிரஸில் உம்மன்சாண்டியும் ரமேஷ் சென்னிதலாவும் ஆளுக்கொரு பக்கம் கோஷ்டி அரசியல் நடத்தியதாலேயே, அந்த மாநிலத்தில் காங்கிரஸால் கரைசேர முடியவில்லை. இதை தெளிவாக உள்வாங்கி இருக்கும் டெல்லி காங்கிரஸ் தலைமை, இரண்டு பேரின் ஆதரவாளர்களையும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து முற்றாக களையெடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இது தொடர்பாக தற்போதைய மாநில தலைவர் சுதாகரனுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதை அடுத்து, இரண்டு கோஷ்டிகளையும் சாராத புதியவர்களை கொண்ட மாவட்ட தலைவர்கள் பட்டியலை தயாரித்து டெல்லிக்கு அனுப்பி இருக்கிறாராம் சுதாகரன். இதில் பெரும்பாலானவர்கள் சுதாகரன் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலின் ஆதரவாளர்கள் என்பது தனிக்கதை. புதிய மாவட்ட தலைவர்கள் நியமன அறிவிப்பு வெளியான பிறகு கேரள காங்கிரஸில் சின்னதாய் ஒரு பிரளயம் வெடிக்கலாம் என்கிறார்கள்.

x