முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனும் ராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலாளராக இருந்த அவரது மகன் ஆனந்தும் அமமுகவிலிருந்து திமுகவுக்கு தாவியது போல், சிவகங்கை மாவட்ட அமமுக செயலாளர் தேர்போகி பாண்டியும் திமுகவுக்கு தூது அனுப்பினாராம்.
அதற்கு திமுக மாவட்டச் செயலாளர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடமிருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். இதையடுத்து சாதி ரீதியாக அமைச்சர் ஐ.பெரியசாமி யிடம் பேசினாராம் பாண்டி. அவருக்காக பெரியகருப்பனிடம் ஐபி தரப்பு பேசியதற்கு, “அண்ணே... அந்தப் பையன் கையில கொஞ்சம் பணம் காசு வெச்சிருக்கான். அவர கட்சியில சேர்த்தோம்னா சென்னையில யாரையாச்சும் புடிச்சுவெச்சுக்கிட்டு தனி லாபி பண்ணுவாரு. அதனால நமக்குத்தான் தேவையில்லாத குடைச்சல் வரும்” என்று பதில் வந்ததாம். இதையடுத்து ஐபி சைலன்ட் ஆகிவிட, இப்போது அன்பில் மகேஷ் தரப்பை நாடியிருக்கிறாராம் பாண்டி. உள்ளுக்குள் இத்தனை மூவ்கள் நடந்தாலும், சசிகலா பிறந்த நாளுக்கு காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி லட்டெல்லாம் கொடுத்து அசத்தினார் பாண்டி.