முருகனுக்கு சிபிஆர் விருந்து வைத்த ரகசியம்?


கோவையின் முன்னாள் பாஜக எம்பி-யான சி.பி.ராதாகிருஷ்ணன், அதிகாரத்தில் இருந்தபோது அவ்வளவாய் இறங்கிவர மாட்டார். காலம் இப்போது அவரை இறங்கிவர வைத்திருக்கிறது. இரண்டு முறை எம்பி-யாக இருந்தும் சிபிஆரால் மத்திய அமைச்சராகவோ மாநில தலைவராகவோ ஆகமுடியவில்லை. ஆனால், திடீர் வரவான எல்.முருகன் மாநில தலைவர், மத்திய அமைச்சர் என சூப்பர் ஃபாஸ்ட்டில் போய்க்கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அணுகுமுறை தான் என சிபிஆர் லேட்டாக உணர்ந்திருப்பார் போலிருக்கிறது. அதன் தாக்கமானது கடந்த வாரம் கோவையில் ‘மக்கள் ஆசி யாத்திரை’யைத் தொடங்கிய முருகனை, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று தன் கையால் அவருக்கு விருந்து பறிமாறினாராம் சிபிஆர். இவரது இந்த திடீர் மாற்றம் தான், இப்போது கோவை பாஜகவினர் மத்தியில் ஹாட் டாபிக். “உண்மையிலேயே சிபிஆர் இறங்கி வந்திருக்கிறாரா அல்லது தனது அரசியல் ‘பங்காளி’யான வானதி சீனிவாசனை சமாளித்து முன்னுக்கு வர, முருகனின் தயவை நாடியிருக்கிறாரா என்பது அந்த முருகனுக்கே வெளிச்சம்” என்கிறது கோவை பாஜக வட்டாரம்.

x