ரங்கசாமி... ரொம்ப லேட் சாமி!


எதிலும் நிதானமாக செயல்படுவது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பிறவிக் குணம். அதற்காக, இந்த விஷயத்திலுமா இப்படி ஸ்லோமோஷன் காட்ட வேண்டும் என்று அங்கலாய்க்கிறார்கள் புதுச்சேரி பத்திரிகையாளர்கள். பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அங்கீகரித்தது தொடங்கி அவர்களுக்கான கரோனா காலத்து நிவாரணங்களை வழங்குவது வரை முன்னோடியாக இருக்கிறது தமிழக அரசு. ஆனால், புதுச்சேரியில் இதற்கான சுவடே தெரியவில்லை. கரோனாவுக்கு பலியான பத்திரிகையாளர்கள் மூவரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றிகூட முதல்வர் மூச்சுவிடாமல் இருக்கிறார். அதேநேரம் பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அந்த மூன்று பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கும் தனது சொந்தப் பணத்தில் தலா ஒரு லட்சம் வழங்கி இருக்கிறார். ஆளுநர் தமிழிசையும் தன் பங்குக்கு, தனது சொந்தப் பணத்தில் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கி ஸ்கோர் செய்திருக்கிறார். இத்தனைக்கும் பிறகும் முதல்வரின் கஜானா கதவு திறந்தபாடில்லை.

x