எஸ்.பி.வேலுமணிக்கு அடுத்ததாக கோவை வடக்குத் தொகுதி எம்எல்ஏ-வான அம்மன் அர்ச்சுனன் வீட்டில் கட்சிக்காரர்களுக்கு காலை டிபன் கமகமக்கும் என்கிறார்கள். கடந்த முறை அம்மன் எம்எல்வாக இருந்த கோவை தெற்கில் அதிகப்படியான திட்டப் பணிகள் நடந்திருக் கின்றன. அதனால், அங்கே ஊழலுக்கும் பஞ்சமிருக்காது என்று கமல்ஹாசனே கோடிட்டுக் காட்டினார். ‘வேலுமணியின் வலதுகரம்’ என பட்டம் வைத்திருக்கும் அம்மன் வீட்டில் அர்ச்சனை போட்டால், வேலுமணிக்கு எதிரான ஆவணங்களும் சிக்கலாம் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்குப் போடுகிறார்களாம். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பேசும் கோவை அதிமுகவினர், “சீக்கிரமே அம்மன் வீட்டிலும் ரெய்டு நிச்சயம்” என அடித்துச் சொல்கிறார்கள்.