அண்ணன் டெல்லிக்குப் போனது அதுக்குத்தான்!


முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய உயர்நீதி மன்றம் க்ரீன் சிக்னல் காட்டிவிட்ட நிலையில், எந்த நேரத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராஜேந்திர பாலாஜியையும் நெருக்கலாம் என்கிறார்கள். “இதிலிருந்து தப்பிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டு விசாரணைக்கு தடைவாங்கலாம்” என்று சட்டப் புள்ளிகள் யாரோ யோசனை சொல்லி இருக்கிறார்கள். இதை நம்பி உள்ளூர் சட்டப்புள்ளி ஒருவரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு டெல்லிக்குப் புறப்பட்ட ராஜேந்திர பாலாஜி, அப்படியே வடநாட்டில் மினி ஆன்மிக பயணம் ஒன்றையும் அமைத்துக் கொண்டாராம். இந்த ரகசியங்கள் தெரியாமல், அண்ணன் பாஜகவில் இணையப் போவதாக செய்திகளைப் பரப்பிவிட்டார்களாம். பாலாஜியின் அரசியல் எதிரிகளைக் கேட்டால், “இந்த நியூஸைக்கூட அவரே ஆள வெச்சு திட்டமிட்டு பரப்பீருப்பாருங்க” என்று டபாய்க்கிறார்கள்.

x