அமைச்சர் கனவில் தமிழரசி


வென்றால் அமைச்சர் பதவி நிச்சயம் என்ற நம்பிக்கையில்தான், மானாமதுரையில் பெரும் பணம் செலவழித்து போட்டியிட்டார் முன்னாள் அமைச்சர் தமிழரசி. ஆனால், கனிமொழியின் விசுவாசியாக காட்டிக் கொண்டதாலோ என்னவோ அவருக்கு அமைச்சர் யோகம் அடிக்கவில்லை. இந்த நிலையில், 34 பேர் கொண்ட அமைச்சரவையில் இரண்டே இரண்டு பேர் மட்டும்தான் பெண்கள் இருக்கிறார்கள். எனவே, இன்னொரு பெண்ணுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்த வாய்ப்பை பட்டியலினத்தவருக்கு தரவேண்டும் என பெண்ணியவாதிகள் சிலர் கனிமொழியிடம் வலியுறுத்தி இருக்கிறார்களாம். இது நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை. ஆனாலும் தமிழரசியும் இப்போது அமைச்சர் கனவில் மிதக்க ஆரம்பித்திருக்கிறார்.

x