2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் பதவிக்கு பொதுவேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த எதிர்க்கட்சிகள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கும் பிரசாந்த் கிஷோர், “பாஜகவை எதிர்க்க துணிச்சலான ஆள் மம்தா தான். அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் நிச்சயம் பாஜகவை வீழ்த்தி விடலாம்” என எதிர்க்கட்சிகள் முகாமில் தூபம் போட ஆரம்பித்திருக்கிறாராம். பாவம்... காங்கிரஸ் தான் இதற்கு என்ன ரியாக்ஷன் காட்டப் போகிறதோ தெரியவில்லை!