ரூட்டு ரொம்பப் பழசுதாம்பு...


கடந்த வாரம் தனது ஆலங்குடி தொகுதியில் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மெய்யநாதன். இதில், கொத்தமங்கலத்திலிருந்து குலமங்கலம் வழியாக அறந்தாங்கி செல்லும் வழித்தடமும் ஒன்று. இந்த வழித்தடத்தை, ஏற்கெனவே முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் இருந்தபோது தொடக்கி வைத்தாராம். அவர் பதவியிலிருந்து இறங்கியதும் வழித்தடமும் முடங்கியதாம். அடுத்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் காலத்தில் மீண்டும் இந்த வழித்தடத்துக்கு உயிர் கொடுத்தாராம். அவரது பதவிக் காலம் முடிந்ததும் வழித்தடமும் வழக்கம் போல முடங்கியதாம். “இப்போது அமைச்சர் மெய்யநாதன் மூன்றாவது முறையாக இந்த வழித்தடத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இதுவாவது நீடித்து இருக்கட்டும்” என்று சொல்லும் ஏரியாவாசிகள், “விழா வேணும்னா புதுசா இருக்கலாம். ரூட்டு ரொம்பப் பழசுதாம்பு...” என்று கிண்டலடிக்கவும் செய்கிறார்கள்.

x