மதுரையைக் கலக்கும் ‘மாமன்ற வேட்பாளர்’கள்!


உள்ளாட்சித் தேர்தலுக்காக மதுரையில் திமுகவும் அதிமுகவும் போட்டிபோட்டுக் கொண்டு தயாராகின்றன. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைக்கும் தடுப்பூசி முகாம்களை, வார்டு கவுன்சிலர் வேட்பாளர் ரேஸில் இருப்பவர்களே முன்னின்று நடத்துகிறார்கள். ஆளும் கட்சியின் ஆட்டம் இப்படி இருக்க, அதிமுகவினரோ, போஸ்டர்களில் தைரியமாக ‘மாமன்ற வேட்பாளர்’ என்று போட்டு புரட்சி செய்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்னவெல்லாம் நடத்தப் போகிறார்களோ!

x