பழனியப்பனை தடுக்காத டிடிவி!


அமமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், தன்னைவிட்டுப் பிரிந்து திமுகவுக்குப் போனதில் டிடிவி தினகரனுக்கு பெருத்த வருத்தமாம். இதுகுறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய டிடிவி, “எத்தனையோ பேரு என்கிட்ட கோடி கோடியா பணம் வாங்கிருக்காங்க. அப்படி வாங்கிய பலபேரு எனக்கு துரோகமும் பண்ணிருக்காங்க. ஆனா, பழனியப்பன் ஒருத்தர் மட்டும் தான் என்கிட்ட இருந்து ஒரு பைசாகூட வாங்காதவரு. பணம் வேணுமான்னு எத்தனையோ தடவ அவருக்கிட்ட நான் கேட்டிருக்கேன். ஒரு தடவகூட அவரு, எனக்கு பணம் தாங்கன்னு கேட்டது இல்ல. திமுகவுக்குப் போகப் போறேன்னு அவரு சொன்னப்ப, அவரை என்ன சொல்லி நிப்பாட்டி வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல. அதனால, ‘உங்களுக்கு எது நல்லதுன்னுபடுதோ அதுபடி முடிவெடுங்க’ன்னு சொல்லிட்டேன்” என்றாராம்.

x