ஆக்‌ஷன் புதுசு... ஆம்புலன்ஸ் பழசு?


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் ஒருவர் ‘நல்லறம் அறக்கட்டளை’ என்ற அமைப்பை நடத்துகிறார். அதிமுக ஆட்சியில்  இந்த அறக்கட்டளையின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், வால்பாறை அதிமுக எம்எல்ஏ-வான அமல் கந்தசாமி தனது தொகுதி மக்களுக்காக ஸ்பான்ஸர் உதவியுடன் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்து அதை செயலிலும் காட்டினார். உடனே, எஸ்.பி.வேலுமணியும் தனது தொகுதி மக்களுக்காக ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார். அந்த ஆம்புலன்ஸில் ‘நல்லறம் அறக்கட்டளை’ என்று இருப்பதைப் பார்த்துவிட்டு, “இது, அதுல்ல...” என்று சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

x