ம.சுசித்ரா
susithra.m@hindutamil.co.in
விளையாட்டுகளின் பெருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ல் தொடங்கவிருக்கின்றன. ஆகஸ்ட் 8 வரை நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 120 வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். இவர்களில் 12 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் தமிழக மக்களைப் பூரிப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றால் 3 கோடி ரூபாய் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது
மட்டுமல்ல... தேர்வாகி இருப்பவர்களுக்குத் தலா 5 லட்சம் ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
தடகளம்… தமிழகம்