வச்ச குறி தப்பாது!- தங்க மங்கையின் தன்னம்பிக்கை வாழ்க்கை


சாதனா
readers@kamadenu.in

வலது கை விரல்கள் அம்பை இழுத்துப் பிடிக்க, தாடையில் ஆள்காட்டி விரலை அழுத்தமாகப் பதிக்கிறார் அந்த இளம்பெண். இலக்கை ஒரு சில விநாடிகள் மட்டுமே அவரது கண்கள் குறி பார்க்கின்றன. அடுத்த நொடிப் பொழுதில் இலக்கின் மையத்தில் அம்பு குத்தி நிற்கிறது.

ஆம்! இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி வைத்த குறிகளில் பெரும்பாலானவை இலக்கு தவறியதில்லை. சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் ஹாட்ரிக் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார் தீபிகா.

இந்தப் போட்டியில் மகளிர், கலப்பு அணி, ஒற்றையர் ஆகிய மூன்று விதமான போட்டிகளில் பங்கேற்று மூன்றிலும் தங்கம் வென்றார் தீபிகா. அதிலும் ஒற்றையர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், சர்வதேச அளவில் நம்பர் 1 வில்வித்தை வீராங்கனை என்ற அந்தஸ்தையும் அடைந்திருக்கிறார். இந்தியாவின் தீபிகா, கோமாலிக்கா, அங்கிதா குழு மெக்சிகோவை 5-1 என்ற செட் கணக்கில் வென்றது. கலப்புப் பிரிவில் தனது கணவர் அதானு தாஸூடன் இணைந்து 5-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்து ஜோடியை தீபிகா தோற்கடித்தார்.

x