யாருக்கும் பங்கில்லை... எல்லாம் எனக்கே!


தேர்தல் சமயத்திலேயே, “அடுத்து எங்க ஆட்சி தான்” என்று தெம்பாகச் சொல்லி வளம் ‘திரட்டி’யவர் தஞ்சை திமுக எம்எல்ஏ-வான டி.கே.ஜி.நீலமேகம். மீண்டும் தனக்கே வாய்ப்புக் கிடைத்து எம்எல்ஏ ஆனதும் அண்ணனின் அதிகாரம் இன்னும் தூள் பறக்கிறதாம். “கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் யாரும் எனக்காக உள்ளார்ந்து வேலை பார்த்து ஜெயிக்க வைக்கல. நானே எனது சொந்த செல்வாக்குல ஜெயிச்சிருக்கேன். அதனால என் தொகுதியில நான் சொல்றபடி தான் எல்லாம் நடக்கணும். அதுல பங்கு குடு... இதுல பங்கு குடுன்னு யாரும் எனக்கிட்ட வந்து நிக்கக்கூடாது” என்று நீலமேகம் கர்ஜிப்பதைப் பார்த்து ஏக கடுப்பில் இருக்கிறார்களாம் கட்சி சீனியர்கள்.

x